சஜித் தலைமையில் புதிய கூட்டணி!
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி பரந்தப்பட்ட கூட்டணியொன்றை கட்டியெழுப்ப உள்ளது.
இதற்கான உடன்படிக்கை நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி பணியாற்றும் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியில் பங்காளிக் கட்சிகளாக உள்ள கட்சிகள் என பல்வேறு தரப்பினரை இணைத்து இந்த பரந்தப்பட்ட கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.
இந்த கூட்டணியின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைகள் வகுக்கப்பட உள்ளன.
-(3)




