அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்த தான், முடிந்தளவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சேவைகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற எதிர்பார்த்த போதும், முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களால் தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தனது வயது மற்றும் உடல்நிலைகளை கருத்திற்கொண்டு அடுத்த தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
-(3)




