செய்திகள்

சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக நிமல் சிறிபால டி சில்வா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் ​மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மன்றக் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இந்த அரசியல் குழு கூட்டம் இன்று(08) காலை நடைபெற்றது.
-(3)