செய்திகள்

சன்ரைசர்ஸ் அணியில் இணைகின்றார் யாழ் இளைஞர் வியாஸ்காந்த்

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் இருந்து வருகின்றது.

கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற ஏலத்தின் போது இலங்கை வீரரான வனிந்து ஹசரங்கவை ஐதராபாத் அணி வாங்கியிருந்தது.

எனினும், காயம் காரணமாக,வனிந்து ஹசரங்க 2024 ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கை அணியை பிரதிநிதித்துப்படுத்தும் வியாஸ்காந்த் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் விளையாடி வருகின்றார்.

அத்துடன், கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் வளைபந்து வீச்சாளராகவும் செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துப்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையும் வியாஸ்காந்தை சாரும்.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாதுலன் என்ற மாணவரும் ஐபிஎல் இன் மற்றுமொரு பிரபல அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலைபந்து வீச்சாளராக இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-(3)