ஐதேக – பொதுஜன பெரமுன புதிய கூட்டணிக்கு முயற்சி!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன புதிய அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஆராய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு கட்சிகளுக்கும் இடையே கொள்கை ரீதியில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக இரு தரப்பிலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டணியுடன் அரசாங்கத்துடனும் மற்றும் எதிர்க்கட்சியுடனும் தொடர்புடைய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை இணைத்துக்கொள்ளவும் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்தக் கூட்டணி தொடர்பில் பொது இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதில் கொள்கை ரீதியில் சிக்கல்கள் காணப்படுவதாகவும், அவற்றை சரி செய்து கூடிய விரைவில் கூட்டணியை அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
-(3)




