பொது வேட்பாளராக விஜேதாச ராஜபக்ஷ?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பலர் கோரிக்கை விடுத்து வருவதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில போட்டியிடுவது குறித்து எதிர்வரும் சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், “மகா சங்கத்தினரும் ஏனைய மதத் தலைவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் சில வாரங்களில் சிறந்த தீர்மானம் எடுப்பேன்” என நம்பிக்கை வெளியிட்டார்.
-(3)




