செய்திகள்

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏப்ரல் 30  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திருத்தத்திற்கு அமைய அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 368 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கபட்டுள்ள நிலையில், 333 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 377 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 215 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்ததிற்கு அமைய எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை – இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (IOC) அறிவித்துள்ளது.

-(3)