இலங்கையில் இனரீதிளயான வன்முறைகள் உருவாகாது தடுத்தல்
மருத்துவர் சி..யமுனாநந்தா
எமது கடந்தகால அனுபவங்கள் எம்மை இலங்கையில் ஜக்கியத்துடன் வாழ்வதற்கான வழியினைக் கற்றுத்தந்து உள்ளது. அதனை நாம் புரிந்து எமது சமூகத்தினை வழி நடத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் சனாதிபதித் தேர்தலையோ அல்லது பாராளுமன்ற தேர்தலையோ நடத்தினால் இலங்கையில் இனரீதியான முரண்பாடு அரசியல்வாதிகளால் உருவாக்கப்படடும். மாறாக மாகாணசபைத்தேர்தலை நடத்தினால் பிரதேச ஒருமைப்பாடு பேணப்படும். மாகாணசபைத்தேர்தலுக்கு பின்னர் பாராளுமன்றத்தேர்தலையும் அதன் பின்னர் சனாதிபதித்தேர்தலையும் நடத்தினால் இனரீதியான அரசியல் பிரச்சாரம் அதிக அளவில் நடைபெறாது. இவை நாம் கடந்த கால அனுபவங்களளாக கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகும்.
பொருளாதார தாழ்வு நிலையில் தேர்தல்களை எதிர்கொள்ளும் போது எதிர்தரப்பு அரசியல்வாதிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிப்பர். இது ஒரு ஒருங்கிய பயங்கரவாத செயலாக கருதப்படல் வேண்டும்.
தொடர்ச்சியாக இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகள் நடைபெற்றால் அவசரகால நிலையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கைகளை குறித்த காலத்திற்கு தடை செய்தல் அவசியம்.
அடுத்து கடந்த வாரத்தில் யாழ்பாணநகரில் முற்றவெளியில் நிகழ்ந்த களியாட்ட விழா குழப்பத்தில் முடிந்தது. யாழ்ப்பாணக் கோட்டையும் அதனைச் சூழ்ந்த பிரதேசமும் போத்துக்கேயர் காலத்தில் இருந்து பாரிய மனித அவலங்களைச் சந்தித்த இடமாகும். 1971 ம் ஆண்டு புரட்;சியன் போது தென்னிலங்கை இளைஞர்கள் இங்கேயே சிறைவைக்கப்பட்டு இருந்தனா. 1984 ம் ஆண்டுக்குப் பின் பல உயிர்களின் பரிதவிப்புக்கள் இப்பகுதியில் நிகழ்ந்து உள்ளது. இதில் இலங்கை இராணுவ வீரர்களும் பொது மக்களும் அடங்குவர். எனவே இத்தகைய துன்பியல் ஆத்மவலியினை உடைய நிலத்தில் களியாட்ட நிகழ்வுகளை எதிர்காலங்களில் நடத்தாது விடுவதே நல்லது. மேலும் இத்தகைய இடங்களில் குதூகலிக்க மனம் கொள்வது கடந்த வரலாற்றை அறியாத தன்மையாகும்.
இத்தகைய இடங்களில் நிகழும் வன்முறைகள் இன முரண்பாடுகளை அதிகரிக்கவே செய்யும். எனவே இவற்றில் நாம் அவதானமாக இருத்தல் வேண்டும்.


