“இலங்கை திவால் நிலையிலிருந்து மீண்டுள்தாக அரசாங்கம் கூறுவதுபொய்”
ஜனாதிபதி இலங்கை அன்னை கயிறு பாலத்திலிருந்து கடந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது கட்டுக்கதை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பீரிஸ்,
கயிறு பாலத்தில் ஏற்றியவர் ஜனாதிபதி தான். பரிஸ் கழகத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றும் 02 மற்றும் 03 ஆகிய தினங்களில் கூடுகிறது.
அந்த ஒப்பந்தம் இணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறான உடன்படிக்கைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமக்கு உரிமை உள்ளது.
நாடு திவால் நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அரசாங்கம் கூறுவது பொதுமக்களை ஏமாற்றுவதாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
-(3)




