செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல்கள்!

வெளிநாடுகளில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வெளிநாடுகளில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 29 குற்றவாளிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, யுக்திய நடவடிக்கைக்கு எதிராக பாதாள உலகம் அவநம்பிக்கையுடன் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், ஒபரேஷன் யுக்திய செயற்படும்” என்று அவர் வலியுறுத்தினார்.
-(3)