ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா: கட்டுப்பணம் செலுத்தினார்!
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கான கட்டுப்பணம் இன்று (05) செலுத்தப்பட்டுள்ளது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் தம்மிக்க ரத்நாயக்கவினால் சற்று முன்னர் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுயேட்சை வேட்பாளர் சிறிபால அமரசிங்கவின் கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.
இவர் ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
-(3)




