செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை முற்பகல் 11 மணி வரை நடைபெறும்.
நேற்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நிறைவடைந்ததுடன், அதன்போது 40 பேர் வரையில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

-(3)