நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று மீள ஆரம்பமாகவுள்ளது.
வாரத்தில் ஏழு நாட்களும் இந்த படகுச் சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைய நான்கு மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
“சிவகங்கை” கப்பல் நாகப்பட்டினத்திலிருந்து காலை 08 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் காங்கேசன்துறையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து பகல் 02 மணிக்கு புறப்பட்டு மாலை 06 மணிக்கு மீண்டும் நாகப்பட்டினத்தை சென்றடையும்.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணி ஒருவருக்கான கட்டணம் வரிகள் உட்பட 59 அமெரிக்க டொலர்கள் (5 000 இந்திய ரூபா ) என்றும், காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணச்சீட்டு கட்டணம் 55 அமெரிக்க டொலர்கள் (4,650 இந்திய ரூபா ) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் படி, நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு ஒருவழிக்கட்டணமாக 17,804 ரூபாவும் காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையேயான பயணச்சீட்டு கட்டணம்16,557 ரூபாவும் அறவிடப்படும்.
வணிகர்கள் மாத்திரமின்றி சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்குச் செல்வதற்கு படகுச் சேவையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-(3)




