செய்திகள்
ஜனாதிபதியாக பதவியேற்று பணியை ஆரம்பித்தார் அநுரகுமார!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
15 நிமிடங்கள் மட்டுமே நிகழ்வு நடத்தப்பட்டது.
இங்கு உரையாற்றிய புதிய ஜனாதிபதி ”மக்கள் ஆணையை மதித்து அமைதியான ஆட்சியை முன்னெடுப்பேன் ” என்றார்.




