செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

-(3)