செய்திகள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றது!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரங்களை கீழே வருமாறு.

பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு

விஜித ஹேரத் – வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில்

சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்

ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்

லால் காந்த – கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம்

அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சுனில் ஹந்துன்னெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள்

பிமல் ரத்னாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்

நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதாரம், வெகுசன ஊடகம்
சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு

சுனில் குமார கமகே – விளையாட்டு, இளைஞர் விவகாரம்

வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில்
குமார ஜயகொடி – வலுசக்தி
தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல்

-(3)