புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரங்வல
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார்.
அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார்.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவரது பெயரை முன்மொழிந்தார், அதை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர பிரதிக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை முன்மொழிந்தார்.
இதேவேளை, ஆளும் கட்சியின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நலிந்த ஜயதிஸ்ஸவும் நியமிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சபாநாயகர் வரவேற்றார்.
இதேவேளை, முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
-(3)




