தமிழ்க் கட்சிகள் கூடி கலந்துரையாட முடிவு!
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் 25ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்துவதற்கு கட்சிகள் இணங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு விவகாரம், அரசியல் தீவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
நேற்றைய தினத்தில் தானும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரனும் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சந்தித்தோம். ஏற்கனவே தனித் தனியே சிறிதான் மற்றும் அடைக்கலநாதனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
-(3)




