செய்திகள்

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பொடி லெசி மும்பையில் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜனித் மதுசங்க என்ற ‘பொடி லெசி’ நாட்டிலிருந்து தப்பிச் சென்றதாக கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வௌியாகி வந்தன.

பொடி லெசிக்கு பிணை வழங்கப்பட்டதாகவும், ஆனால் அடுத்த நீதிமன்ற திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிணை நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் பொடி லெசி இந்தியாவில் தங்கியிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

-(3)