மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு!
மூத்த ஊடகவியலாளரும், ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது இல்லத்தில் காலமானார்.
தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றய அன்னார் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டிருந்தார்.
மேலும் அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலயத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அன்னாரது மறைவிற்கு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-(3)




