டெய்சி ஆச்சி குற்றப்புலனாய்வு பிரிவால் கைது!
யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபாரஸ்ட் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி வழக்கு தொடர்பாக இன்று காலை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அண்மையில் மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ அண்மையில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-(3)




