செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று (10) நடைபெறவுள்ளது.

அமெரிக்க தீர்வை வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் 12 பேர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அவகாசம் கோரியிருந்தனர்.

இதன்படி இன்றைய தினத்தில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

-(3)