செய்திகள்

தேசிய மக்கள் சக்தி மட்டுமே தற்போது அரசியல் இயக்கமாக இருக்கின்றது – மே தின மேடையில் ஜனாதிபதி

நாட்டை மாற்றியமைக்க வேண்டுமெனில், ஊழல் நிறைந்த அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல காரணிகளின் அடிப்படையில் ஒரு வலுவான அடித்தளத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் மற்றைய அரசியல் இயக்கங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன என்றும், தேசிய மக்கள் சக்தி மட்டுமே தற்போது அரசியல் இயக்கமாக இருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் அமைந்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி இன்று கொழும்பு – காலி முகத்திடலில் நடத்திய முதலாவது மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இம்முறை “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

-(3)