செய்திகள்

ஆனந்தசங்கரி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு

தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு தெரிவித்த ஆனந்தசங்கரி ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

70 வருட அரசியல் அனுபவத்துடன் நான் இருக்கின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்டு பிழையான கருத்துக்கள் கூறப்பட்டு அரசியல் மோசடி செய்யப்பட்டது.

 

.

தமிரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்முடன் இணையுங்கள். அவ்வாறு இணைய வேண்டிய காலம் இதுவாகும். தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வா உருவாக்கிய கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி.

எல்லாரும் இணைந்து ஒன்றாக பயணித்த எமது கட்சி பல தியாகங்களை செய்தது. அந்த கட்சியிலிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதே பொருத்தமானது. தமிழரசில் இருந்து பிரிந்தவர்கள் பெரும் தலைவருக்காக எம்முடன் இணையுங்கள்.

மற்றவர்கள் அனுபவித்து போதும். ஒதுங்குங்கள். மக்களை வருத்தி அநியாயம் செய்தும், மக்களை துன்புறுத்தியும் உள்ளனர்.

இம்முறை தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிடவில்லை. மீண்டும் ஒன்றாக சேர்ப்பதற்காகவே இவ்வாறு நாம் தனித்து போட்டியிட விரும்பவில்லை.

இன்று தமிரசுக் கட்சி பிரிந்து 5 ஆறு பிரிவுகளாக உள்ளது. எமது இந்தக் கட்சியையும் உடைக்க முளைத்தனர். ஆனால் அது முடியவில்லை. நாங்கள் ஒருமித்து பயணிக்க வேண்டும். அதற்கான சூழல் உள்ளது.

எனவே, இந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலின் பின்னர் அனைத்தையும் களைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைய வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொறுப்புக்களை பகிர்ந்து ஏற்க அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.