செய்திகள்

அமைச்சரவையில் மாற்றம்?

அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் உயர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு இன சமூகங்களையும், பிரதேசங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைச்சரவையில் பதவிகள் வழங்குவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த திருத்தங்கள் செய்வது குறித்து இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.