சுமந்திரனின் அனுசரனையில் தான் இந்த சந்திப்பு நடந்ததாம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டல், பணிப்புரை – அனுசரனையில் தான் அந்த கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சிறிதர் தியேட்டருக்கு வந்து, தமது கட்சிக்கு ஆதரவு கோரினார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நேற்று ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டருக்கு சென்று, உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் கூட்டாக இணைந்து ஆட்சியைப் பிடிப்பது பற்றி பேசினார்.
இந்த பேச்சின் போது, தமிழரசு, ஈ.பி.டி.பி கூட்டில், வி.மணிவண்ணன் தரப்பும் இணைய விரும்புவதையும் சீ.வீ.கே சுட்டிக்காட்டியிருந்தார். சீ.வீ.கே, சிறிதர் தியேட்டர் சென்றது தமிழரசு கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கொதிப்படைய வைத்தது. கட்சித்தலைமையை அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.




