செய்திகள்

ஹர்ஷண சூரியப்பெரும இராஜினாமா!

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஹர்ஷண சூரியப்பெரும தனது ராஜினாமா கடிதத்தை வெள்ளிக்கிழமை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையாளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த ஹர்ஷண சூரியப்பெரும, தனது பதவியை ராஜினாமா செய்து, நிதி அமைச்சின் செயலாளராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ள நிலையிலேயே இவர் பதவி விலகியுள்ளார்.

இதேவேளை, ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவை தொடர்ந்து, ஏற்பட்டுள்ள பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அடுத்து வரும் பாராளுமன்ற அமல்களின் புதியவர் ஒருவர் நியமிக்கபடவுள்ளார்.