செய்திகள்

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஆரம்பம்

“Clean Sri Lanka” வேலைத் திட்டத்துடன் இணைந்த வகையில் 425 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் இன்று ஆரம்பமானது.

ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, செயற்திறனான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தும் சிறப்புமிகு சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகிறேன். தேசிய பணியாக கருதி, இந்த பாரிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய பங்களிக்கும் இலங்கை விமானப்படைக்கும், நகர அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கைப் பொலிஸ் ஆகியவற்றிற்கும் தன்னார்வத்துடன் இதில் இணையும் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு (NIO Engineering) உள்ளிட்ட அமைப்புகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், அதற்கான அவர்களின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பெரிதும் பாராட்டுகிறேன் என்ன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.