செய்திகள்
மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னிஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் சொத்து தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.