செய்திகள்

தெதுரு ஓயாவில் நீராடிய ஐவர் மரணம்!

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

முன்னதாக காணாமல் போனவர்களில் ஒருவர் மாத்திரமே பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.