றக்பி வீரர் தாஜுதீனின் மரணம் கொலையே! சி.ஐ.டி.விசாரணையில் தகவல்
இலங்கை தேசிய றக்பி அணியின் உப தலைவர் வஸீம் தாஜுதீன் விபத்தில் மரணிக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றப் புலனாய்வு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந் நிலையில் இந்த கொலையுடன் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனுக்கும், அவருடன் இருந்த சில பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பிருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அதன்படி அவர்கள் விரைவில் கைதாகும் சாத்தியம் காணப்படுவதகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழு ம்பு குற்றத்தடுப்புப் பிரிவும் தொடர்ந்து முன்னெடுத்து வந்த றக்பி வீரர் தாஜுதீ னின் மரணம் குறித்த விசரணைகள் கடந்த பெப்ரவரி மாதம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் அப்பிரிவின் பணிப்பாளர் நாகஹமுல்லவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிலையிலே வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்ததாகவும் அது தொடர்பிலான ஆதாரங்களை பொலிஸார் திரட்டியுள்ளதாகவும் நீதி மன்றுக்கு அது தொடர்பில் அறிக்கையினை புலனாய்வுப் பிரிவினர் தாக் கல் செய்ய தயாராகி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வெள்ளவத்தை முருகன் வீதியை வதிவிடமாகக் கொண்ட வஸீம் தாஜு தீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சலிகா மைதானம் அருகே மதில் ஒன்றுடன் மோதியவாறு எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தன.
இந் நிலையில் வஸீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது நுரையீரலுக்குள் காபன் மொனோக்சைட் வாயு நிரம்பி இருப்பது குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் மரணத்தில் சந்தேகம் நில வுவதாக கூறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கும் மேலதிக பரிசோதனைகளுக்காக பாகங்கள் அனுப்பப்பட்டன.
எனினும் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கடந்த பெப்ரவரி மாதமே பொலிஸாருக்கு கிடைத்தது. அந்த அறிக்கை ஊடாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் தாஜுதீனின் மரணம் குறித்து தெளிவான ஒரு விடய த்தை முன் வைக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்படவே பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மேலும் சில தடயங்களின் உதவியுடன் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்
அந்த விசாரணைகளிலேயே வஸீம் தாஜுதீன் விபத்தில் இறக்கவில்லை எனவும் அவரது மரணம் கொலை எனவும் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே நாரஹேன்பிட்டி , சாலிகா மைதானத்திற்கு அருகே வஸீம் தாஜுதீனின் சடலம் மீட்கப்பட்ட போதும் அவரது பணப்பை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் இருந்து பின்னர் மீட்கப்பட்டது.
ஹெவலொக் கழகத்தின் வீரரான தாஜுதீனுக்கும் பிரபு ஒருவரின் மகனுக்கும் இடையே காதலி ஒருவர் தொடர்பில் முர ண்பாடுகள் இருந்தமை தொடர்பிலும் ஹெவலொக் கழகத்தில் இருந்து பிறிதொரு கழகத்துக்கு தாஜுதீனை விளை யாட கோரியமையால் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பிலும் சிற்சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ள புலனாய்வுப் பிரிவினர் அந்த தகவல்கள் ஊடாகவும் விசா ரணைகளை முன்னகர்த்தியுள்ளதாக பொலி ஸ் தகவல்கள் சுட்டிக்காட்டின.
2008ஆம் ஆண்டு இலங்கை தேசிய றக்பி அணியின் உறுப்பினராக இனை த்துக் கொள்ளப்பட்ட வஸீம் தாஜுதீன் கல்கிஸ்ஸை சென்.தோமஸ் வித்தியால யத்தின் பழைய மாணவர் என்பதுடன் 2009ஆம் ஆண்டின் ஜனரஞ்சக றக்பி வீரரு க்கான விருதினையும் அவர் வென்றி ருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.




