செய்திகள்

கிரகிரி வாவியில் பெண்ணின் சடலம்

நுவரெலியா கிரகரி வாவியில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது..
இன்று காலை நுவரெலியா கிரகரிவாவியில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவல் ஒன்றையடுத்து நுவரெலியா பொலிஸார் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்டனர்.

குறித்த பெண்ணின் சடலம் கிரகரிவாவியின் நடுப்பகுதியில் மிதந்து கொண்டிருந்த காரணத்தினால் பொலிஸார் சடலத்தை இழுத்து வருவதற்கு அங்கிருந்த படகு சவாரி செய்பவர்களின் உதவியை பெற்றுக் கொண்டனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கொலை செய்யப்பட்டு வாவியில் போடப்பட்டுள்ளதா? அல்லது குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் நுவரெலியா பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

எனினும் இதுவரையில் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.