கைதான 130பேரையும் அனுராதபுரம் சிறையில் பார்வையிட்ட மாவை, சுமந்திரன்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி யாழ். நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச் சாலையில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளவர்களை தமிழ் தேசிய கூட்ட மைப்பினர் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவர் கள் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படு கொலையை கண்டித்து இடம் பெற்ற ஆர்ப் பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டிடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் பேரில் 130 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராஜா மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகி யோர் அவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ள னர். நேற்று காலை அனுராதபுரம் சிறை ச்சாலைக்கு சென்று விளக்க மறியலில் வைக் கப்பட்டுள்ள 130 பேரையும் பார்வையிட்ட பின்னர் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேசரிக்கு தெரிவிக்கையில்,
வித்தியாவின் படுகொலையை கண்டி த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் யாழ். நீதி மன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 130 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களை சந்திக்க சென்றபோதே இவர்களில் 36 பேர் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதிலும் இந்த மாணவர்களில் 30பேர் 20வயதுக்கும் குறைவானவர்களாவர். ஆகவே இவர்களை விடுவிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள். தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 1ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் விசாரணைக்கு வருகின்றது. எனவே இதன்போது முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கும் நோக்கில் இம் மாணவர் கள் சார்பில் நான் ஆஜராகவுள்ளேன்.
இந்த மாணவர்களின் நிலைமையை எடுத்துக்கூறி அவர்களை விடுவிக்கக் கோரவுள் ளேன். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை விடுவிக்க கோரமுடியாவிடினும் விசேட காரணங்களை எடுத்துக் கூறி அவர்களை விடுவிக்க முடியும். எனவே இந்த மாணவ ர்கள் விடயத்திலும் அவர்களின் கல்வி நிலைமையை எடுத்துக் கூறி அவர்களை விடுவிக்குமாறு நீதிமன்றத் தில் கோரவுள் ளேன். அதேபோல் இந்த சம் பவத்துடன் தொடர்பு இல்லாத பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தை வேடிக்கை பார் த்த நபர்கள், அப்பகுதியில் பயணி த்த வர் கள் என பலர் பொலிஸாரினால் கைது செய் யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களும் அவ் வாறே கைது செயயப்பட்டிருக்க வேண் டும். அத்தோடு ஏனைய மக்களையும் விடு விக்கவேண்டிய கடமை எமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.




