செய்திகள்

எதிர்காலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு அரசியல் தடை செய்யப்பட்டுள்ளது!- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

எதிர்காலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு அரசியல் தடை செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை மெதிரிகிரியவில் 31.05.2015 அன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இதன் பிறகு வரும் காலங்களில் முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு அரசியல் தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டத்தை செயற்படுத்தி அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு மாத்திரமே அவர்களுக்கு உள்ளது.

எமது நாட்டு இராணுவம் ஒழுக்க சீரான இராணுவம் எனபதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இனிவரும் காலங்களில் சகல பாடசாலைகளிலும் மாணவர் படையணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.