செய்திகள்
மஹிந்த பிரதமரானதும் பொலிஸ் அதிகாரிகளை கல்லால் அடித்துக் கொல்வோம் என்றவரின் கடவுச் சீட்டு தடை செய்யப்பட்டது
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமரானதும் நிதி மோசடி விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளை கல்லால் அடித்து கொல்வோம் என கருத்து வெளியிட்ட தென் மாகாண சபை உறுப்பினரான டீ.பி.உபுலின் வெளிநாட்டு கடவுச் சீட்டை தடைசெய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் குடி வரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினரின் கோரிக்கைக்கமையவே அவரி கடவுச்சீட்டு தடைசெய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மொணராகலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானதும் பொலிஸ் நிதி மோசடி பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கல்லால் அடித்துக்கொள்ளப்படுவர் என அவர் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணை நடவடிக்களை மேற்கொள்ளும் வகையிலேயே அவரின் வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் நீதி மன்றத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.




