களுவாஞ்சிகுடி விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.00மணியளவில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக துவிச்சக்கர வண்டியில் லொறி ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது களுவாஞ்சிகுடி பழைய பொலிஸ் நிலைய வீதியை சேர்ந்த பொன்னம்பலம் நடராஜா(65வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது லொறிச்சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




