யாழ்.ஏழாலை மயிலங்காடு ஸ்ரீமுருகன் முன்பள்ளி விளையாட்டு விழா
யாழ்.ஏழாலை தெற்கு மயிலங்காடு ஸ்ரீமுருகன் விளையாட்டு விழா அண்மையில் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகவும் வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் மற்றும் மயிலங்காடு ஸ்ரீமுருகன் வித்தியாலய முன்னாள் அதிபர் திருமதி எஸ்.ரகுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.விழாவில் சிறார்களின் ஓட்டம்,தாராநடை,இசையும் அசைவும்,விநோத உடை எனப் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
விநோத உடை நிகழ்வில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கெதிராக சிறார்கள் பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.






