மஹிந்த தொடர்பில் ராஜித கூறுவது பொய்: சுசில் பிரேம ஜயந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ அவருக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளமை உண்மைக்கு புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற் போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினரான சுசில் பிரேம்ஜயந்த, குழுவில் அங்கம் வகிக்காத நபர்கள் வெளியிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட மாட்டார் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் நாட் டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்து ள்ளதாகவும் இதனை தவிர அவருக்கு வழ ங்க நாட்டில் பதவிகள் இல்லை எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.




