செய்திகள்

ஐ.. தே. க. மாநாடு 11 ஆம் திகதி

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பொரள்ளை கம்பல் மைதானத்தில் நடை பெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலை 9 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

ஜனவரி 8ஆம் திகதி ஐ.தே.க உள்ளிட்ட சக்திகள் இணைந்து நாட்டில் ஏற்படுத்திய ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்தான தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப் படவுள்ளது.

கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் இதில் கலந்துகொள்ள வுள்ளனர்.