சுசில் , நிமல் , அனுர இன்று மஹிந்தவை சந்திப்பர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது கண்டி மாவட்டத்தில் நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்றுள்ள நிலையில் இவர்கள் மூவரும் கண்டிக்கு சென்று அவரை சந்திக்கவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த இவர்கள் மூவரும் அவருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாகவும் மற்றும் தேர்தல் விடயம் தொடர்பாகவும் மஹிந்தவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மைத்திரி மஹிந்தவை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை இன்று சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




