செய்திகள்
மஹிந்தவை தோற்கடிக்க எந்த அணியுடனும் இணைய தயார் : பொன்சேகா
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அவர்களை தோற்கடிப்பதற்காக எந்தவொரு அணியினருடனும் இணைய தயார் என ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இல்லையேல தனது கட்சி தனித்தே போட்டியிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளோம். இருப்பினும் மஹிந்த அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுமாகவிருந்தால் அவர்களை தோற்கடிப்பதற்காக எந்தவொரு அணியினருடனும் இணைந்து செயற்படவும் தயாராகவிருக்கின்றோம். எமக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்பினரிடமிருந்து அழைப்புகள் வந்துள்ளன. அது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.




