செய்திகள்

மக்களுக்காக எந்த சவாலையும் எதிர்க்கொள்ள தயார் : ஜனாதிபதி

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தான் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை உஸ்ஸாபிட்டிய பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையிலேயே ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளேன். இதன்படி எவ்வாறான சவால்களாக இருந்தாலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அதனை எதிர்கொண்டு அதனை வெற்றிக்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.