செய்திகள்

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் வேடங்களில் சிம்பு நடனமாடுகிறார்

‘வாலு’ படத்தின் ‘தாறுமாறு’என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலரது வேடங்களில் சிம்பு நடனமாட இருக்கிறார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்க நீண்ட நாட்களாக தயாரிப்பில் ‘வாலு’ படம் தயாராகிவருகிறது. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 17ம் தேதி சிம்பு சினி ஆர்ட்ஸ் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

ஜூலை 17ம் தேதி ‘வாலு’ படத்துடன் தனுஷ் நடித்த ‘மாரி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.