செய்திகள்

மஹிந்தவுக்கான புதிய அணி தயார் நிலையில் : அலுவலகமும் திறக்கப்பட்டது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் களமிறங்க இறுதி நேரத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுமதி மறுக்கப்படுமாகவிருந்தால் தனியான அணியொன்றில் அவரை களமிறக்க அவருக்கு ஆதரவளிக்கும் தரப்பினர்  தயார் நிலையில் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கொழும்பு விஜேராம வீதியில் மஹிந்தவுக்கான விசேட அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தனியான அணியில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படுமாகவிருந்தால் அதற்கான வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு  தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.