செய்திகள்
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை தற்போதைய அரசாங்கமும் செய்கின்றது : பெப்ரல் குற்றச்சாட்டு
கடந்த அரசாங்கத்தினால் செய்த அதே தவறுகளை தற்போதைய அரசாங்கமும் செய்துக்கொண்டிருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய நியமனங்களை வழங்கல் , பதவி உயர்வு , இடமாற்றம் பொன்ற செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தின் போது முன்னனெடுக்கப்பட்டது. அதேபோன்ற இந்த அரசாங்கமும் செய்துக்கொண்டிருக்கின்றது.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடவுள்ளதாக ரோகன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.




