செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்பு வழங்கும் தீர்மானத்தை மைத்திரி மீளாய்வு செய்வாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு வழங்கும் தீர்மானத்தை மீளாய்வுக்குற்படுத்த ஜனாதிபதி மைத்திரி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்க இணங்கியதாக வெளியான தகவல்களையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலர் வேறு கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்தும் சில கட்சிகள் விலக தீர்மானித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அந்த தீர்மானத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இறுதி நேரத்தில் மஹிந்தவுக்கு வேட்பு மனு கிடைக்காது போகலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இறுதி நேரத்தில் வேட்பு மனு கிடைக்காது போனால் அதற்கு மாற்று வழியாக மஹிந்தவை வேறு அணியில் களமிறக்க அவரின் ஆதரவு தரப்பினர் சகலதையும் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.