செய்திகள்

பாலச்சந்தர் திரை விருது பெறும் காக்கா முட்டை

மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படம் காக்கா முட்டை. படம் வெளியான தருணத்தில் இருந்து தற்போது வரை தேசிய விருது துவங்கி பல விருதுகளை பெற்று வருகிறது. தற்போது கே.பாலசந்தர் திரை விருது கிடைத்துள்ளது.

பாலசந்தர் பிறந்ததினத்தை முன்னிட்டு அறக்கட்டளை ஒன்று பாலசந்தரின் ஆஸ்தான சீடர் நடிகர் கமல் கைகளால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் பாலசந்தர் கடைசியாக நடித்த உத்தம வில்லன் படம் திரையிடப்பட இருக்கிறது.

வெள்ளித்திரை, சின்னத்திரை கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறக்கட்டளையின் சார்பாக, திரு. கே.பாலசந்தர் அவர்கள் சாதனைகள் புரிந்த நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களைக் கௌரவித்து விருதுகளும் வழங்கப்படவுள்ளது.

விருதுகள் பெறுவோர் –
கே.பாலசந்தர் நாடக விருது – மூத்த கலைஞர் திரு.காத்தாடி ராமமூர்த்தி
கே.பாலசந்தர் திரை விருது – திரு.மணிகண்டன் இயக்குநர் ‘காக்கா முட்டை’
கே.பாலசந்தர் சின்னத்திரை விருது – திரு.திருமுருகன் இயக்குநர், தயாரிப்பாளர்
சின்னத்திரை விருது – திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர்