யாழ்.மாதகல் சென்.ஜோசப் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு
யாழ்.வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட மாதகல் சென்.ஜோசப் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தைக் கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வின் நினைவாக பாடசாலை வளாகத்தில் வடமாகாண சபை உறுப்பினரால் பயன்தரு மரமும் நாட்டி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரவீந்திரன்,சண்டிலிப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாணவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். யாழ்.நகர் நிருபர்-






