செய்திகள்
தேர்தல் காலத்தில் அரச நிறுவனத்துக்கு ஆட்சேர்த்த ரிஷாத்துக்கு எதிராக சிங்களரவய போர்க்கொடி
தேர்தல் காலத்தில் இலங்கை கனிம மணல் லிமிட்டெட் நிறுவனத்துக்கு சில ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்தார் என சிங்களராவய அமைப்பினர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
தேர்தல் சட்டத்தை மீறி அமைச்சர் அரசநிறுவனத்துக்கு ஆட்களை சேர்த்துள்ளார் என்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இம்முறைப்பாட்டை தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மஹிந்ததேஷப்பிரியவிடம் வழங்கியுள்ளனர்.




