செய்திகள்

ஶ்ரீ.ல.சு.கவுக்கு ஐ.ம.சு.கூவிலிருந்து விலகும் நோக்கம் கிடையாது : ராஜித சேனாரட்ன

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியாக தேர்தலில் களமிறங்குவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் தீர்மானிக்கவில்லையென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்பு மனு வழங்க மேற்கொண்ட தீர்மானத்தையடுத்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகவேண்டுமென பலர் ஜனாதிபதிக்கு  கோரிக்கை விடுத்துள்ளதாக  செய்திகள் வெளியாகும் நிலையில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ராஜித  இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே போட்டியிடும். கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.  அவ்வாறு தனியாக போட்டியிடுமாறு கட்சியில் யாரும் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.